பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! மோசடி நடப்பதாக இம்ரான் கான் கட்சியினர் போராட்டம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இம்ரான் கானின் PTI கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்த இடங்களில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் PTI கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்! இம்ரான் ஆதரவு சுயட்சைகள் முன்னிலை.. பெரும்பான்மை இல்லாமல் இழுபறி..
இதில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி PTI ஆதரவு வேட்பாளர்கள் 51 மாகாணங்களையும், நவாஸ் ஷெரீப் கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். முக்கியமாக நாட்டின் இரண்டாவது பெரிய மாகாணமான பஞ்சாபில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இம்ரான் கானின் PTI பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக கூறி PTI கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனால் பல இடங்களில் போலீசாருடன் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
Country wide protest by PTI workers againt rigging election.#RiggingAgainstPTI@ryangrim https://t.co/UyC6BoC1V7
— DD (@DostdarHussain2) February 9, 2024