இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த பதும் நிஷங்கா
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பதும் நிஷங்கா படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பதும் நிஷங்கா 139 பந்துகளில் 210 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 8 சிக்சர்களும், 20 பவுண்டரிகளும் அடங்கும்.
#IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..!
இதன்மூலம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்கா படைத்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா 189 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதை நிஷங்கா முறியடித்துள்ளார். தொடர்ந்து 382 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.