மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி
தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 2,337 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 100 கோடியே 34 லட்ச ரூபாய் வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது உதயநிதி இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “இதுவரை 25,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 30,000 கோடி என்ற லட்சியத்தை அடைவோம். அதையே இலக்காக நிர்ணயித்துள்ளோம். தற்போது, 17 லட்சம் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் காலை உணவும், 1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையும், லட்சக்கணக்கான பெண்கள் உயர்கல்விக்காக மாதந்தோறும் 1000 ரூபாயும் வழங்கப்படுகின்றது.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இப்படியாக, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் வெற்றியடைய, மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. உதாரணமாக, இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பூமாலை வளாகம் கட்டப்பட்டுள்ளது, பெண்கள் முன்னேற்றம் தான் திமுக அரசின் நோக்கம்” என கூறினார்.