இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.. ? ராசி பலன்கள்..!

horoscope feb 10

தை மாதம் 27 [பிப்ரவரி 10,2024]இன்றைய நாளுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம் .

மேஷம்:  

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் .இன்று எடுக்கப்படும் முடிவுகள் நன்மை அளிக்கும். உங்கள் பணியை விரும்பி செய்வீர்கள். உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவரின் விருப்பப்படி நடந்து கொள்வீர்கள். இன்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீங்கள் மன உறுதியுடன் இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வளர்ச்சியினால் மகிழ்ச்சி காணப்படும். உங்கள் பணி இடத்தில் முன்னேற்றம் இருக்கும் மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நீண்ட கால நிலுவைத்தொகை உங்கள் கைக்கு வந்து சேரும்,  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஆன்மீக ஈடுபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. பணிகள் இன்று அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவில் மகிழ்ச்சி பாதிக்கும். பண பற்றாக்குறை  ஏற்படும். கணுக் கால்களில் வலிகள் ஏற்படலாம் அதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம் :

ஆன்மிக செயல்களில் ஈடுபடுவீர்கள் .உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமைய திட்டமிட்டு செயல்படவும் .உங்களின் அஜாக்கிரதையால் பணியில் தவறு செய்வீர்கள் .உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்படும் .நீங்கள் போதிய அளவு பணம் சேமிக்க வேண்டும் .உங்கள் தாயின் ஆரோக்கியதிற்கு செலவு செய்வது உங்களுக்கு  கவலை அளிக்கும் .

சிம்மம்:

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். வாழ்க்கையில் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை சரி மற்றும்  தவறுகளை  ஆராய்ந்து எடுக்க வேண்டும். உங்கள் பணிகளை திறமையாக செய்து நற் பெயர்களை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். போதிய நிதி வரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

இன்று முன்னேற்றமான நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். இன்று எந்த பலனையும் எதிர்பார்க்காமல் வேலைகளை செய்யவும். உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் காணப்படும். அபரிவிதமான பணம் வரவு காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்:

இன்று குழப்பமான எண்ணங்கள் தோன்றும், அதனால் பிரார்த்தனை மேற்கொள்வது பக்தி பாடல்கள் கேட்பது ஆறுதல் அளிக்கும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். உங்கள் துணையுடன் நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்றைய நாளில் பண வரவு, செலவு இரண்டும் சமமாக இருக்கும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை சரிவிகித உணவை உட்கொள்வது நல்லது.

விருச்சிகம்:

இன்று வெற்றி பெறுவதற்கு தைரியமும் உறுதியும் தேவை. பணியிடத்தில் நீங்கள் தவறு செய்ய நேரலாம், கவனமாக பணியாற்றுவது நல்லது .உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். இன்று தேவையற்ற செலவுகள் உண்டாகும். தூக்கமின்மை காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

தனுசு:

இன்று உங்கள் முயற்சியின் மூலம் நன்மையையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். பணியிடத்தில் மேல் அதிகாரிகளிடமிருந்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான உணர்வுகளை பகிர்ந்து கொண்டால் உறவில் மகிழ்ச்சி இருக்கும். கணிசமான பண வரவு இன்று இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:

இன்று நீங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். நீங்கள் சிறப்பாக பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் நட்பாக நடந்து கொள்ள வேண்டும். இன்றைய நாளில் வரவு, செலவு சமமாக இருக்கும். உங்களின் நேர்மறையான  எண்ணத்தால்  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

இன்று நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது அவசியம். பணிகள்  அதிகமாக இருப்பதால் அது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள். பணவரவு குறைந்து காணப்படும். கண் எரிச்சல், அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்:

இன்று முக்கிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். பணிகளை விரைவில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் பொறுமையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். இன்று சிறிய வகையில் கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்