சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்!

Periyar University

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வி முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது புகார் எழுந்தது.

அதாவது, தனது துறையான கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கிய நிதியை, விதிகளை மீறி தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாட திட்டங்களில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் – இன்டர்போல் உதவியை நாட முடிவு..!

கணிப்பொறி, இணையம் மற்றும் உபகரணங்கள் கொள்முதலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணை குழு ஆய்வில் அம்பலமாகியுள்ளது. அதுவும், பல்கலைக்கழக பணிகளை அவுட் சோர்சிங் முறையில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது.

இந்த சூழலில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வி முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பிப்.29ம் தேதி ஓய்வு பெறுவதாலும், முறைகேடு உறுதி ஆகியுள்ளதாலும் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்