ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.!
ஆப்கானிஸ்தானில் இன்று (பிப்ரவரி 9ம் தேதி) அதிகாலையில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நடுக்கம் மிதமான தீவிரத்துடன் இருந்தபோதிலும், வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு நகரமான ஃபைசாபாத் நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கே இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
விமான ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பயணிகள் தவிப்பு..!
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிலும், ஆப்கானிஸ்தானில் கடந்த மாத தொடக்கத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.