இன்று ஆ.ராசாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!
சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதால் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் “அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆ.ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன். எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து வரும் 9-ஆம் தேதி ( அதாவது இன்று ) அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. மக்களவைத் தேர்தலில் ஆ.ராசாவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என தெரிவித்திருந்தார்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா தமிழக முதல்வர்.? – இபிஎஸ் கேள்வி.!
அதன்படி இன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எம்ஜிஆர் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதால் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அவிநாசியில் அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி சார்ந்த அதிமுகவினர் கலந்து கொள்கின்றனர்.