முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு! மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி வெள்ளை அறிக்கையில், 2014-ல் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, ​​பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருந்தது எனவும் பொது நிதி மோசமான நிலையில் இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் ‘வெள்ளை அறிக்கை’யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போல இல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி பொருளாதார நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுத்தது.

2014 இல் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்தது, அப்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் அது முதலீட்டாளர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் என்பதால் அதை மேற்கொள்ளவில்லை.

மோடி அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம் இந்திய நாட்டை நிலையான வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில், வங்கிகள் நெருக்கடி நிலையை சந்தித்தது முக்கிய விஷயமாகும், வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்தது.

நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.!

காங்கிரஸ் அரசாங்கத்தின் போது பொது நிதி மற்றும் பொருளாதார நிலைமை மோசமாகவும், ஒழுங்கற்றதாகவும் இருந்ததோடு ஊழலும் பரவலாக இருந்தது.

2014ல் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த நிலையில் அதன் நீண்ட கால வளர்ச்சியை செயல்படுத்த மீண்டும் தொடக்கத்தில் இருந்து கட்டமைக்கப்பட வேண்டியிருந்தது.

2014க்கு முன்னர் இருந்த பல சவால்களை தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 10 ஆண்டுகளில் நிர்வாக திறமை மூலம் வெற்றிகரமாக சமாளித்தது.

மக்களுக்கு நம்பிக்கையை கொடுப்பதும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதும், காலத்தின் கட்டாயமாக அரசுக்கு இருந்தது.

காங்கிரஸ் அரசு பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக்குவதில் பெரிய தோல்வியை சந்தித்தது.

காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாகவும், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை எனவும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடந்த ஏராளமான மோசடிகள் காரணமாக பெரும் வருவாய் இழப்புகள் ஏற்பட்டன.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே நமது இலக்கு.

அரசியல் லாபங்களை விட மத்திய அரசுக்கு முதலில் தேசம் தான் முக்கியம் என்பதையும் வெள்ளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai
Tamilnadu CM MK Stalin - PMK Leader Dr Ramadoss