மட்டன் பிரியர்களா நீங்கள்? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

mutton

அசைவ வகையில் மட்டன் என்றாலே கொழுப்பு அதிகம் என்று ஒதுக்கிவிடுவார்கள்,இருந்தாலும் கூட மட்டன் பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் , அந்த வகையில் மட்டனில் செம்மறியாடு, வெள்ளாடு இவற்றுள் எது சிறந்தது  மற்றும் மட்டன் எவ்வாறு சமைத்தால் உடலுக்கு நல்லது என்றும்  மட்டன் எடுத்துக் கொள்ளும்போது நாம்  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.

மட்டனில்  வெள்ளாடு மற்றும் செம்மறியாடு என இரு வகைகள் உள்ளது .

செம்மறி ஆட்டில் உள்ள சத்துக்கள் 

செம்மறி ஆட்டில் 100 கிராம் கறியில் 300 கிராம் கலோரி உள்ளது, புரோட்டின் 25 கிராம் உள்ளது 10 கொலஸ்ட்ரால் 100 மில்லி கிராமும்,பேட்  20 கிராமும்  உள்ளது.

வெள்ளாட்டில்  உள்ள சத்துக்கள் 

100 கிராம் வெள்ளாட்டுக் கறியில் 130 கலோரிகளும் 27 கிராம் புரதமும், 3 கிராம் பேட்டும் உள்ளது. அயர்ன் , சிங்க், விட்டமின் பி  12 ,மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இரு ஆடுகளிலுமே சம அளவில் தான் உள்ளது.

  • சமைக்கும் முறை
    மட்டனை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை ஆனால் அதை எப்படி சமைக்கிறோம் மற்றும் எந்த அளவுக்கு நாம் உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நம் உடலுக்கு அது ஆரோக்கியத்தை தருமா? அல்லது தீங்கை தருமா என்பதை முடிவு செய்ய முடியும்.
  • மட்டன் சமைக்கும் போது குறைவான எண்ணெயில் சமைப்பது தான் நல்லது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது சிறப்பு.

மட்டன் எடுத்துக் கொள்ளும் போது சேர்க்கக்கூடிய உணவுகள்

  • மட்டன் உட்கொள்ளும் போது நார் சத்து  நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மட்டனை கிரேவியாக செய்யும் பொழுது தோலுடன் உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், பீன்ஸ், முருங்கைக்காய் ,வாழைக்காய் இவற்றையும் சேர்த்து சாப்பிட வேண்டும். கூடவே வெங்காயம் மற்றும் வெள்ளரி சாலட் ,தக்காளி போன்றவற்றை இணையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிரியாணி வகைகளை எடுத்துக்கொள்ளும் போது டால்டா, நெய் சேர்க்காமல் எண்ணெய்  குறைவாகவும் சமைத்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான உணவாக இருக்கும். பிரியாணி எடுத்துக்கொள்ளும் போது  இனிப்பு வகைகள், எண்ணெய் கத்திரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் கட்டாயம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

இந்த முறைகளை கடைப்பிடித்து மட்டன் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஆகவே செம்மறி ஆட்டை விட வெள்ளாடுகளில்  கலோரிகள் குறைவாக உள்ளது எனவே முடிந்தவரை வெள்ளாட்டு கறியை எடுத்துக் கொள்வது சிறந்தது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்