சிறுபான்மையினர் பற்றி அவதூறு.! அண்ணாமலை வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.!

TN BJP President Annamalai - Madras High court

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022ஆம் ஆண்டு தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வேற்று மதத்தினர் (சிறுபான்மையினர்) பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது.

அதாவது, தீபாவளி பண்டிகையில் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக வேற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் தான் நீதிமன்றத்தின் வழக்கு தொடர்கிறார்கள் என்று கருத்து கூறியதாக அவர் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது . சமூக சுற்றுச்சூழல் ஆதரவாளர் பியூஸ் மனுஷ் தான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

சேலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும்,  இதன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, தான் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. மேலும், தான் கூறிய கருத்துக்கள் சமூகத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி, அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், சேலம் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு அண்ணாமலை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்