அந்த நடிகருடன் காதலா? மனம் திறந்த 96 பட நடிகை வர்ஷா பொல்லம்மா!
96 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிகில் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் வர்ஷா பொல்லம்மா நடித்து இருக்கிறார்.
சமீபகாலமாக பெரிதாக தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் வேறு மொழிகளில் நடிக்க சென்று இருக்கிறார். அந்த வகையில், இவர் தற்போது சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக ‘உரு பரம பைரவகோனா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையில், வர்ஷா பொல்லம்மா பிரபல தெலுங்கு நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன் தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவல்களுக்கு ‘உரு பரம பைரவகோனா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது காதல் வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இனிமே டாப் ஹீரோக்களை வச்சு தான் படம்? வேல்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
இது குறித்து பேசிய அவர் ” என்னை பற்றி தவறான சில வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கிறது . அப்படி பரவும் தகவல் எதுவுமே உண்மை இல்லை. எனவே வதந்திகள் எதுவும் நம்பவேண்டாம். தெலுங்கில் ஒரு புதிய திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ‘உரு பரம பைரவகோனா’ படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்திலும் என் கேரக்டரில் இருந்து வரும் செய்தி. பூமியின் கதாபாத்திரம் எனது நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அதனால் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தற்போது தமிழ். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறேன்” எனவும் நடிகை வர்ஷா பொல்லம்மா தெரிவித்துள்ளார்.