இன்று திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்!

DMK bjp

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், பிப்.1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், ஜார்கண்ட் முதல்வர் விவகாரம், சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கனவே நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு அறிவித்து இருந்தார்.

முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு… இன்று விசாரணை..!

இந்நிலையில், திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்பு சட்டை அணிந்து நடத்தவுள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கவில்லை எனவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழ்நாடு ஆளுநர் விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்டவைகளை வலியுத்தி மத்திய அரசை கண்டித்து திமுக  போராட்டம் நடத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்