எடுத்த காரியத்தில் வெற்றி பெற இந்த தை அமாவாசையில் இதெல்லாம் பண்ணுங்க..!

thai ammavasai 2024

9- 2 -2024 அன்று தை அமாவாசை வர இருக்கிறது. மாதம் தோறும் அமாவாசை வந்தாலும்  தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசையின் சிறப்பு, துவங்கும் நேரம் முன்னோர்களுக்கு படையல் போடும் நேரம், தர்ப்பணம் கொடுக்கும் நேரம் ,அன்று என்னெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தை அமாவாசையின் சிறப்பு
ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இதில் தற்போது வர இருப்பது தை அமாவாசை. சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைகின்ற நாள்தான் அமாவாசை என்கிறோம். நம் முன்னோர்கள் விண்ணுலகத்திலிருந்து பூலோகத்திற்கு இதுபோல் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வருவார்கள் ,அந்த நேரம் நாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்கு படையல் இடுவது, தர்ப்பணம் கொடுப்பது போன்ற செயல்களை செய்வது மிக அவசியமாகும். இவ்வாறு நாம் செய்தால் நமக்கு ஏற்படும் பித்ரு தோஷம், காரியத்தடங்கள், பூர்வ புண்ணிய தோஷம் போன்றவை நீங்கும். நம் முன்னோர்களை முன் வைத்து செய்யப்படும் இந்த காரியம் வரும் சந்ததியினருக்கும் பாதுகாப்பாய் அமையும் என்பது ஐதீகம்.

மாதம் தோறும் வரும் அம்மாவாசை தினங்களில் செய்ய முடியாதவர்கள் இந்த குறிப்பிட்ட அமாவாசைகளில் ஆவது நம் முன்னோர்களை நினைவில் வைத்து சில காரியங்களை செய்ய வேண்டும்.

தர்ப்பணம் கொடுக்கும் நேரம்

9 -2- 2024 அன்று காலை  7- 53 க்கு  அம்மாவாசை திதி துவங்கி 10-2-24 அன்று 4-34வரை உள்ளது . அதனால் காலை 8-1  மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம்.குறிப்பாக  11.30-12-30 இந்த நேரத்தில் கொடுப்பது மிக சிறப்பு . தர்ப்பணம் செய்யும்போது சூரியனை சாட்சியாக வைத்து தான் செய்ய வேண்டும். அதனால் சூரியன் உச்சிப் பொழுது இருக்கும் வரை செய்வதுதான் சிறப்பு.

தர்ப்பணம் எங்கெல்லாம் செய்யலாம்

நதிகள், கடல் , புனித தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம். முடிந்தவரை நான்கு பேருக்காவது   உணவளிப்பது,ஜீவராசிகளுக்கு உணவு  கொடுப்பது போன்றவற்றை செய்யலாம்.

விளக்கேற்றும் நேரம்

விளக்கேற்றும் போது நாம் சந்திரனை சாட்சியாக வைத்து தான் விளக்கேற்ற வேண்டும் 6. 30 – 7.30 வரை விளக்கேற்றுவது சிறந்தது.

படையல் போடும்  நேரம்

மதியம் 1.15 தில்  இருந்து 3.30 வரை நம் முன்னோர்களுக்கு படையல் வைக்கலாம். படையலில்  கண்டிப்பாக அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைப்பது சிறந்தது.

ஆகவே  நமக்கு, நடமாடிய கடவுளாக இருப்பது நம் முன்னோர்கள் தான். இறைவனும்  நம் முன்னோர்களுக்கும் நாம் என்ன செய்கிறோம் என்பதை பார்த்துக் கொண்டே தான் இருப்பார்கள் அதனால் நாம் செய்வதை உள்  அன்போடு செய்து அவர்கள் மனம் குளிர செய்து அவர்களிடம் மனம் உருகி நாம் வேண்டினோமேயானால் நிச்சயம் நம் வாழ்வில் வரும் தடைகள் நீங்கி மிகப்பெரிய வெற்றி பெற முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்