இன்றைய நாள் எப்படி இருக்கும்.? ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்…
இன்று தை மாதம் 24ஆம் தேதி (பிப்ரவரி 7, 2024) ஒவ்வொரு ராசிக்குமான நற்பலன்களை இங்கே காணலாம்…
மேஷம் :
இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய தருணங்கள் அதிகமாக இருக்கும், அதனை மனதில் வைத்துக் கொண்டு தெளிவாக சிந்தித்து உங்களுக்கு தேவையான சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். உங்களுக்கு இன்று கடினமான சூழ்நிலைகள், சவால்களை சந்திக்க நேரலாம். அதனை திறம்பட கையாள வேண்டும்.
உங்கள் துணையுடன் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் உங்களுக்கு சிறிது மன வருத்தத்தை அளிக்கும். ஆதலால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று ஓய்வுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.
ரிஷபம் :
இன்பம், துன்பம் என கலந்து இருக்கும் சமநிலையான உணர்வு இன்று காணப்படும். உங்கள் நண்பர்களின் ஆதரவு இன்று கிடைக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று சுறசுறுப்பாக செயல்படுவீர்கள்.
இல்லற வாழ்க்கை சிறக்க வாய்ப்புள்ள நாள். பண வரவு வரும் நாள். பண சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். இன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம் :
இன்று உங்கள் பிரார்த்தனையும், சில சேவைகளும் தான் உங்களுக்குநன்மை பயக்கும். அது உங்களுக்கு தெளிவான நம்பிக்கையை தரும். உங்கள் நேர்மையான அணுகுமுறை மூலம் பணியில் உயர்வு கிடைக்கும்.
உங்கள் துணையுடன் நேர்மையை கடைபிடித்தால் இருவருக்கும் இடையே நல்ல பிணைப்பு உருவாகும். இன்று உங்கள் சேமிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம் :
இன்று பொறுமையாக சிந்தித்து செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உருவாகலாம். அதனால் மனதில் குழப்பங்கள் உருவாகலாம். அதனை கடந்து செல்ல வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
உங்கள் துணையுடன் பிரச்சனைகள் உருவாகலாம். அதனால் அதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. நிதி சம்பந்தமான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம் :
இன்று உங்களுக்கு அசௌவுகரியமான சூழல் உருவாகும். நண்பர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
இன்று குழப்பமான மனநிலையே இருக்கும். அதனால் உங்கள் துணையுடன் பேசும்போது கவனமாக தெளிவாக பேச வேண்டும். செலவுகளை ஆராய்ந்து தேவையற்ற செலவுகளை கண்காணித்து செலவு செய்யுங்கள். உடல் உழைப்பு இன்று அதிகமாக இருக்கும்.
கன்னி :
இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகளை இன்று எளிதில் அடையலாம். பணிச்சூழல் சிறப்பானதாக அமையும்.
உங்கள் துணையுடன் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதனால் உறவில் அன்பு, மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று நீங்கள் சுறுசுறுப்பாக ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள்.
துலாம் :
தெய்வ வழிபாடு இன்றைய நாளை நல்ல நாளாக மாற்றும். அதனால் நற்பயன்கள் கிட்டும். மேல் அதிகாரிகளுடன் சில மனக்கசப்பு ஏற்படலாம். ஆதலால், சூழ்நிலையை உணர்ந்து திறம்பட செயல்பட வேண்டும்.
உங்கள் துணையுடன் கட்டுப்பாடுடன் பேச வேண்டும். இல்லையென்றால் பேசுவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத செலவுகள் ஏற்படும்நாள். இன்று உடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் :
சில அசௌகரியமான சூழல் உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உங்கள் கவனக்குறைவால் பணியிடத்தில் சில பிரச்சினைகள் உருவாகும்.
மனஉளைச்சல் காரணமாக உங்கள் துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், திட்டமிட்டு செயல்பட வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைக்க உடல் பயிற்சி செய்ய வேண்டும்.
தனுசு :
இன்று பயணம் மேற்கொள்ளும் நாள். சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தினசரி செயல் பாடுகளில் தாமதங்கள் ஏற்படும். பணிச்சூழல் சவாலானதாக அமையும். அதனை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
உங்கள் துணையுடன் பிரச்சனை ஏற்படும். அதனை அமைதியாக செயல்பட்டு தீர்க்க வேண்டும். இன்று ஓய்வுக்கு நேரம் ஒதுக்குங்கள்.
மகரம் :
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கான நாள். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான வளர்ச்சி இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும்.
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளியிடங்களுக்கு செல்வீர்கள். உங்கள் சேமிப்பு ஏறும் நாள். நீங்கள் இன்று ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.
கும்பம் :
முன்னேறுவதற்கு இன்று ஏற்ற நாள். திறமையாக செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே. முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்றைய பணிகள் எளிதாக நடைபெறும்.
தம்பதிகளுக்கு இடையே பரஸ்பரம் மரியாதை, நல்ல புரிதல் இன்று ஏற்படும். நம்பிக்கையான சூழ்நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம் :
இன்று உங்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்து விடாது. கடுமையாக உழைத்து உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே பலன் கிட்டும். இன்று பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பலன் தரும் நாளாக இருக்காது. திட்டமிட்டு பணிகளை செயல்படுத்த வேண்டும்.
இன்று உங்கள் தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அதனால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். சூழ்நிலையை புரிந்து கொண்டு பக்குவமாக செயல்பட வேண்டியது அவசியம். நிதிநிலைமை சீராக இருக்காது. பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை வரும்.