நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்..!
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முயற்சித்ததாக என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு ஏஜென்சி) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன் உள்ளிட்ட பலர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்தி உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை..!
இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர் ஆனார்கள். என்.ஐ.ஏ. சம்மனை அடுத்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள்.