ரூ.3,250 கோடி கடன்.! ஐசிஐசிஐ முன்னாள் CEO கைது சட்டவிரோதம்.! மும்பை நீதிமன்றம் பரபரப்பு.! 

Chanda Kochhar - Deepak Kochhar

பிரபல தனியார் எலக்ட்ரானிக் நிறுவனமான விடியோகான் நிறுவனத்திற்கு சுமார் 3250 கோடி ரூபாய் அளவுக்கான கடனை தள்ளுபடி செய்த விவகாரம் தொடர்பாக , ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி சந்தா கோச்சர் மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோரை சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் கைது செய்தது .

இந்திய எரிசக்தி வாரம் 2024: கோவாவில் பிரதமர் மோடி!

வீடியோகான் நிறுவனமும் சந்தா கோச்சர் கணவர் தீபக் நிறுவனமும் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் என்பதால் 3250 கோடி ரூபாய் கடன் வழங்கியது என்பது முறைகேடாக நடைபெற்றதாகவும், இதன் மூலம் தீபக் கோச்சர் கோடி கணக்கில் பணம் பெற்றதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் ஐசிஐசிஐ தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து கடந்த 2022 டிசம்பரில் சிபிஐ கைது நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த வழக்கில் இருந்து, முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. ஆனால் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் இந்த வழக்கு மீண்டும் மும்பை உயர்நீதிமன்றத்திற்க்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கானது, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என்.ஆர்.போர்க்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்த போது, சந்தா கோச்சர் கணவர் தீபக் ஆகியோர் கைது என்பது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வழங்கிய ஜமீனை மீண்டும் உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்