கட்சி தொடங்கிய விஜய்-க்கு நடிகர் ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை.!
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்-க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில், ரஜினிக்கும் – விஜய்க்கும் இடையே கடந்த ஏகா பொறுத்தமாக இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ரசிங்கர்களே.
சமூக வலைத்தளங்களில் முதலில் சூப்பர் ஸ்டார் பட்டதில் எழுந்த சண்டையை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா-கழுகு கதை கூறியதும், விஜய்யை பற்றி சொல்லுவதாக கூறி விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளிக்க, மறுபக்கம் லியோ பட சக்சஸ் மீட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டாரி ரஜினி ரசிகர்களுக்கு புகைச்சலை உண்டாக்கியது.
இப்படி மாறிமாறி சண்டையிட்டு வந்த நிலையில், லால் சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில், விஜய் தமிழக வெற்றி கழகம் எனற அரசியல் கட்சியை தொடங்கியதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன்! காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக இன்று சென்னையில் இருந்து ஆந்திரா செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், செய்தியாளர்கள் ரஜினியிடம் விஜய்யின் அரசியல் வருகை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒரே வார்த்தையில் ‘வாழ்த்துக்கள்’ என கூறிவிட்டு கிளம்பினார்.