FIFA உலகக்கோப்பை 2026… அட்டவணை வெளியானது..!

FIFA World Cup

பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 ஜூன் 11 அன்று மெக்சிகோ நகரத்தின் ஆஸ்டெகா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.  அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்த உள்ளன. அரையிறுதி போட்டி அட்லாண்டா மற்றும் டல்லாஸ் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

காலிறுதிப் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும் எனவும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி  ஜுலை 19ம் தேதி நியூயார்க்/நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#INDvENG: வெற்றி யாருக்கு..? 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது..!

மூன்று நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 16 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டிகள் பெரும்பாலான போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்படுகின்றன. மொத்தம் 16 நகரங்களில் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்று அசத்தியது.

 உலகக் கோப்பை நடைபெறும் 16 நகரங்கள்:

அட்லாண்டா, பாஸ்டன், டல்லாஸ், குவாடலஜாரா, ஹூஸ்டன், கன்சாஸ் சிட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ், மெக்ஸிகோ சிட்டி, மியாமி, மான்டேரி, நியூயார்க்-நியூ ஜெர்சி, பிலடெல்பியா, சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா, சியாட்டில், டொராண்டோ மற்றும் வான்கூவர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்