#INDvsENG : வரலாற்று சாதனையை  படைத்தார் அஸ்வின்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டு வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சுப்மன் கில் போட்டியில் இருந்து வெளியேற இது தான் காரணம்.. பிசிசிஐ விளக்கம்..!

இதை தொடர்ந்து இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2 வது  டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது, அதன் படி முதல் இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன்பின் 143 ரன்கள் முன்னிலை பெற்று தனது 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கபட்டது. தற்போது இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இதில் 4ஆம் நாளான ஆட்டம் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வின் இன்று சாதனை படைத்தார். இங்கிலாந்து வீரர்களான பென் டக்கெட், ஜோ ரூட் மற்றும்  ஒல்லி போப் ஆகிய விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம்  முன்னணி இந்திய வீரர்களான பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளே இருவரின் சாதனையை அஸ்வி பின்னுக்கு தள்ளி  முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார்.

அஸ்வின் இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 5 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் இரண்டு 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எஸ்.சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 23 டெஸ்டில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளர்.

இங்கிலாந்துக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள்:

அஸ்வின் – 97
எஸ்.சந்திரசேகர் – 95
அனில் கும்ப்ளே – 92
பிஷன் சிங் பேடி – 85
கபில் தேவ் – 85

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்