திமுக – விசிக இடையே பிப்.12ம் தேதி பேச்சுவார்த்தை.!
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. அந்த வகையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், சிபிஎம் குழுவை தொடர்ந்து ம.தி.மு.க. குழுவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடிந்தது.
இந்த இன்லைல், திமுக மற்றும் விசிக இடையே பிப்ரவரி 12-ம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். மேலும், அன்றைய தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் உடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
கடந்தமுறை விட கூடுதல் தொகுதிகளை கேட்டு உள்ளோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.!
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து திமுக தலைவர் முடிவு செய்வார் என இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விசிகவிற்கு 2 தொகுதியும், ஐயூஎம்எல்விற்கு ஒரு தொகுதியும் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.