5 முறையும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்! நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத் துறை ஐந்தாவது முறையாக அனுப்பிய சம்மனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லி அரசு கடந்த 2021 – 22 நிதியாண்டில் கொண்டு வந்த மதுபான கொள்கையால் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலனடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என, டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரிக்க, கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது, அடுத்தடுத்து நான்கு சம்மன்கள் அனுப்பப்பட்டன. கெஜ்ரிவால் அந்த சம்மன்களை சட்டவிரோதம் என கூறி தவிர்த்தார்.
விமான ஊழியர்களால் பாரா விளையாட்டு வீராங்கனைக்கு மோசமான அனுபவம்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவனம்
நேற்று ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பட்ட நிலையில் அதையும் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில் சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவாலுக்கு எதிராக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் மனு அளித்துள்ளது. அந்த புகாரில், “சம்மன் அனுப்பிய பிறகும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அவர் ஒரு பொது ஊழியர்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.