#INDvENG : 2-ம் நாள் ஆட்டம் முடிவு.. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை..!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது  டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து!

இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி 209 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அகமது தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பாதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இருப்பினும்  55.5  ஓவரில் 253 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்தது.  இதனால் 143 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் இருந்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் கிராலி 76 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் எடுத்தனர்.  இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  பின்னர் இந்திய அணி தனது  2-வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் களம் இறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய முதல் இருவரும் நிதானமும் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 5 ஓவர் முடிவில் 28 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ஜெய்ஸ்வால் 15* , ரோகித் சர்மா 13* ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Leave a Comment