பாலியல் புகாரில் சிறைக்கு செல்லும் ‘Squid Game’ நடிகர்.!

Squid Game Actor

ஸ்க்விட் கேம் நடிகரான ஓ யங்-சூ, இளம் பெண்ணை தகாத முறையில் தொட்ட குற்றத்திற்காக 1 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பான ‘ஸ்க்விட் கேம்’என்ற வெப் சீரிஸ் வெளியான சில நாட்களிலேயே உலகமெங்கும் மிகவும் பிரபலமடைந்தது. இந்த தொடரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை நடுங்க வைத்தது என்ற கூறலாம்.

இந்த வெப் சீரிஸில் பிளேயர் 001 என்று அழைக்கப்படும் தென் கொரிய நடிகர் ஓ யோங்-சு, ஒரு பெண்ணைத் துன்புறுத்திய குற்றத்திற்காக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 79 வயதாகவும் நடிகர் யோங்-சு 2021-ன் ஸ்குவிட் கேம் சீரிஸ் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர். இவர் கோல்டன் குளோப் விருதும் பெற்றுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இளம் பெண்ணை முத்தமிட்டதாகவும், கைப்பிடித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. டிசம்பர் 2021-ல் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த பின்னர், நவம்பர் 2022 இல் ஒரு பெண்ணின் அனுமதியின்றி கன்னத்தில் முத்தமிட்டதற்காக கூறி, நடிகர் யோங்-சு மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நான் உயிருடன் இருக்கிறேன்…இறப்பில் திருப்பம்.! வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே!

இந்த வழக்கு சுவோன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் சியோங்னம் கிளையில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்ட குற்றத்திற்காக நடிகருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்குமாறு வழக்கறிஞர்கள் கோரினர். அதன்படி, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் யோங்-சு, எனது கடைசி காலத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமப்பது கடினமாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்