முதலமைச்சரை விட ஆளுநர் அதிகாரம் படைத்தவரா.? திமுக எம்பி தாக்கல் செய்த தனிநபர் மசோதா.!

New Parliament - DMK MP Wilson

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புதன்கிழமை அன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் நிகழ்வுக்கு அடுத்ததாக வழக்கமான நிகழ்வுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! – கனிமொழி பேட்டி.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார். அதில் மாநில ஆளுநர்களின் அதிகாரம் குறித்து ஏற்கனவே உள்ள சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

அரசியல் சட்ட பிரிவு 157-இன் படி ஒரு ஆளுநராக நியமிக்கப்பட்டவர், மாநில முதல்வர் மற்றும் மாநில மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவி நியமானம் செய்து வைப்பது மட்டுமே. ஆனால், குடியரசுத் தலைவரையும், மாநில ஆளுநரையும் ஒரே அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுத்துவது முறையல்ல என்றும்,

குடியரசுத் தலைவர் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், ஆளுநர் பதவி என்பது வெறும் நியமன பதவி மட்டுமே. அதனை குடியரசு தலைவருக்கு நிகராக நடத்த கூடாது.

ஒரு மாநில முதல்வர் தவறு செய்தால் அவர் மீது வழக்கு தொடர நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதுவே ஒரு ஆளுநர் தவறு செய்தால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியநிலை உள்ளது. அப்படியானால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் அதிகாரம் படைத்தவரா என்று கேள்வி எழுகிறது,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட ஆளுநரை கூடுதல் அதிகாரம் அளிப்பது விரும்பத்தகாதது. பொது அமைதியை சீர்குலைக்க பொது நலனுக்கு எதிராக ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். சட்டப்பிரிவு 361-இன் படி ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு இருக்கும் தடையை விடுவிக்க வேண்டும் என்று தனி நபர் மசோதாவில் திமுக மாநிலங்களவை எம்பி வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்