அமைச்சர் கே.என் நேரு மீதான வழக்கு ரத்து – ஐகோர்ட்
அமைச்சர் கே.என் நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அனுமதியின்றி ஒன்று கூடி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016ல் திருச்சி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஒன்றுகூடி பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை களத்தில் காட்டுவோம் -முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து, திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.என் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது, திருச்சி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் கேஎன் நேரு மற்றும் அன்பழகன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.