டெல்லி பாஜக அலுவலகம் முன்னர் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்.! 25 பேர் கைது.!
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை எதிர்த்து களமிறங்கினர். இதில், சண்டிகரில் மொத்தமுள்ள 36 வாக்குகளில், 16 ஓட்டுகள் பெற்று பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால், மேயர் தேர்தலில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, புதிய மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார்.
ஹேமந்த் சோரன் கைது.! சம்பாய் சோரன் ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்பு.!
இந்த சூழலில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்தும், சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை கண்டித்தும் இன்று டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், மேலும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் பலரை போலீஸ் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு எதிராக அக்கட்சியின் தலைமை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக தெரிவித்ததை அடுத்து, டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக தலைமையகத்திற்கு வெளியே கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாக சந்தேகித்து 25 ஆம் ஆத்மி கட்சியினரை, சிங்கு எல்லையில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று கட்சியின் போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சோதனைக்கு பின்னரே அவர்கள் அனுப்பப்படுவார்கள் என்றுள்ளனர்.
Delhi Police has detained 25 AAP workers from Singhu border so far. All of them are the party workers from Punjab and Haryana. Police suspect that they were going to take part in the party’s protest today. A few other workers have been stopped. Those who have been detained at the… https://t.co/1KIvdD5afG
— ANI (@ANI) February 2, 2024