திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்..?
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை தென் மண்டல நிர்வாகிகளுடனும் , நாளை மறுநாள் கோவை மண்டல நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது.
கொடநாடு விவகாரம் – குஜராத் தடயவியல் நிபுணர்கள் வருகை…!
இந்த 2 நிர்வாகி ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்தால் கோவை அல்லது தென் சென்னை தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக இந்த 2 தொகுதிகளை ஒதுக்கினால் கோவை அல்லது தென் சென்னை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் கமல்ஹாசன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.