செஸ் : ஒரே நேரத்தில் 10 போட்டியில் விளையாடி, 10 பேரையும் தோற்கடித்தார் ..நைஜீரிய வீரர் துண்டே ஒனகோயா ..!
நைஜிரியா செஸ் வீரரான துண்டே ஒனகோயா, இன்று பலரும் வியப்படையும் விஷயத்தை சதுரங்க விளையாட்டில் செய்தார். இவர் ஒரே நேரத்தில் 10 வீரர்களுக்கு எதிராக விளையாடி 10 பேரையும் தோற்கடித்தார். இதனால் செஸ் விளையாடும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
ஓனகோயா 10 பேரையும் சுற்றி உட்கார வைத்து கொண்டு இவர் மட்டும் சுத்தி சுத்தி சென்று விளையாடினார். மேலும் செஸ் விளையாடும் பொழுது சதுரங்கப் பலகையில் அவரது ஈர்க்கக்கூடிய நிறைய திறமைகளையும் வெளிப்படுத்தினார், நடைபெற்ற இந்த முழு விளையாட்டும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.
விராட் கோலி என்னுடைய மகன் மாதிரி! சேத்தன் ஷர்மா உருக்கம்!
செஸ் இன் ஸ்லம்ஸ் ( Chess in Slums ) என பெயரிடப்பட்ட நைஜீரிய செஸ் அறக்கட்டளை மூலம் நூறு குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நிதி திரட்டும் ஒரு வித முயற்சியாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இலாபம் நோக்கற்ற இந்த அமைப்பு சதுரங்க விளையாட்டை ஒரு சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் பின்தங்கிய குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டில் சிறப்பாக வர தேவையான திறன்களை கற்றுக்கொள்ள அவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இதுகுறித்து ஒனகோயா கூறுகையில்” DLD மாநாட்டின் இரண்டாம் நாளில், ஒரே நேரத்தில் 10 வீரர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் செஸ் போட்டியில் விளையாடினேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற முடிந்தது.
செஸ் கண்காட்சி எங்கள் அகாடமியில் உள்ள 100 குழந்தைகளின் கல்விக்கு தேவையான பணத்தை திரட்ட உதவியது என்று தெரிவித்தார்.