தமிழக சட்டப்பேரவை பிப்.12ம் தேதி தொடங்கும்- சபாநாயகர் அறிவிப்பு!

TNAssembly

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “வருகின்ற பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனவும் தெரிவித்தார்.

பின்னர் 20 ஆம் தேதி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முன்பணம்  மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல  21 ஆம் தேதி 2023- 24 ஆண்டுக்கான முன்பணம் செலவு மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர் சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த 6 மாதத்தில் முடிக்கப்படும் -தெற்கு ரயில்வே!

முழுமையாக நேரலை செய்வதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அவை நடவடிக்கைகளை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் தான் சென்று கொண்டிருக்கிறோம். 1921 இல் இருந்து நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளை ஆன்லைனில் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டுத்தொடர் தொடங்குகிறது. மக்களவை தேர்தல் நடைபெற விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்