11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடி நிதியுதவி வழங்கப்படுகிறது – நிர்மலா சீதாராமன்..!

Nirmala Sitharaman

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது “இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும், ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக செய்து வருகிறோம்.

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளது. பெண் தொழில் முனைவோருக்கு ரூ.30 கோடி முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம். மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக ஆகியுள்ளனர் என கூறினார்.

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.  7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் கிசான் சம்மன் யோஜனாவின் கீழ் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடி நிதியுதவி வழங்கப்படுகிறது.

பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தால் 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது ” என தெரிவித்தார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்