வரம்பிற்குள் வரி வசூல்.. கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிப்பற்றாக்குறை.! – தேசிய வரி வசூல் தலைவர்.!

Rahul Garg - Union minister Nirmala Sitharaman

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கான கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது . நேற்று குடியரசு தலைவர் உரையில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டன.

இதனை தொடர்ந்து இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேளாண் துறை, விவசாயம் தொடர்பாக பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து, நேரடி வரிகளுக்கான தேசிய கவுன்சில் தலைவர் ராகுல் கர்க் இன்று தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘ பொருளாதாரத்தை இயக்குவதில் நமது நிதித்துறை எப்படி செயல்பட்டது என்பது தொழில்துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பு இன்று மிகத் தெளிவாக கூறப்படும்.

இடைக்கால பட்ஜெட் என்பதால், நமது நிதிப்பற்றாக்குறையை நம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று அனைவரும் உற்று நோக்குகின்றனர். நாம் வரி செலுத்துவதன் மூலமும், மக்கள் மற்றும் வணிகர்களிடம் உரிய வரி வசூலிப்பதன் மூலமும்,  இந்தாண்டு நியாயமான முறையில் நல்ல வரி வசூல் இருந்துள்ளது.

ஒட்டுமொத்த  உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்கான அரசு செலவினம் இரண்டிற்கும் ஒட்டுமொத்த வரி வசூல் வரம்பிற்குள் இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் நிதி நிர்வாகத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டும் என்ற தொழில்துறையின் எதிர்பார்ப்பு, பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வரி வசூல் மூலம் நமது நிதிப்பற்றாக்குறையை 5.9% ஆகக் கட்டுப்படுத்த முடிந்ததாக ஒரு அறிவிப்பு இன்று வெளியாகும்.  இந்த வரி வசூல் இன்னும் சிறப்பாக இருந்தால், நிதி பற்றாக்குறையை மேலும் ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என நேரடி வரிகளுக்கான தேசிய கவுன்சில் தலைவர் ராகுல் கர்க் தனியார் செய்தி  நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்