Budget 2024 Live: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்.! வேளாண்… வருமான வரி… சிறப்பம்சங்கள்…
நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!
மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 11 மணிக்கு அதற்கான உரையை வாசிக்கத் தொடங்கிய அவர், 58 நிமிடங்களில் மொத்த பட்ஜெட்டையும் வாசித்து முடித்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால் மிக குறுகிய காலத்தில் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கினார். அதன்படி, பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இன்று தாக்கலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள், புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் இடம்பெற்றிருந்தது.