கருப்பு உடையில் கவர்ச்சி! ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் கலக்கி கொண்டு வருபவர் ஆண்ட்ரியா. இவர் தொடர்ச்சியாக பெயர் சொல்லும் படங்களிலும், ஹிட் ஆகும் அளவிற்கு பாடல்களை பாடியும் கொடுத்து வருகிறார். இதற்கிடையில், எப்போதும் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடற்கைரையில் கூலிங் க்ளாஸ் போட்டுகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் வைரலானது.
விஜய்யை பாலோவ் செய்யும் அஜித்! விடாமுயற்சி பர்ஸ்ட்லுக் அப்டேட்!
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கருப்பு நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் அடடா கவர்ச்சி இழுக்குது என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும் நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர் பெயர் வைக்கப்படாத இரண்டு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.