ஆர்ஓசிஏ குழுமம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

mk stalin

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கடந்த 29ம் தேதி அந்த நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

இதையடுத்து, நேற்று ஸ்பெயின் நாட்டின் பல முன்னனி நிறுவனங்களின் நிர்வாகிகளை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்த நிலையில், தமிழகத்தில் முதலீடுகள் செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார். பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி வருகிறது.

மதிய உணவு திட்டம்… ரூ.4114 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு…!

இந்த சூழலில், பீங்கான் மற்றும் வீட்டுக்கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில், ஆர்ஓசிஏ (ROCA) குழுமம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்ய உள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்ஓசிஏ குழும இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ் மற்றும் இந்திய நிர்வாக இயக்குனர் நிர்மல் குமார் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நமது அர்ப்பணிப்பு உலக கவனத்தை பெற்று வருகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் தொழிற்சாலைகளை விரிவுப்படுத்தவும், புதிய கிளை தொடங்கவும் உள்ளது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்