விஜய்யை பாலோவ் செய்யும் அஜித்! விடாமுயற்சி பர்ஸ்ட்லுக் அப்டேட்!
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் அரசியல் கட்சி தொடங்கி அந்த கட்சியின் பெயரை அறிவிக்கும் தினம் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் , அந்த கட்சிக்கு தமிழ்நாடு முன்னேற்ற கழகம் என்று பெயர் வைக்கப்பட்டதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த தகவல்கள் வெளியான சமயத்தில் தான் திடீரென விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்!
விஜய் குறித்த தகவல்கள் வெளியாகும் சமயத்தில் எல்லாம் அஜித் படம் குறித்த தகவல் வெளியாவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. ஏற்கனவே, இதற்கு முன்பு துணிவு படம் வெளியான சமயத்திலும் விஜயின் வாரிசு பட அப்டேட் வெளியாகும் போது அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
எனவே, விஜயின் பெயர் எப்போதெல்லாம் பரபரப்பாக பேசப்படுகிறதோ அந்த சமயம் அஜித்தின் புகைப்படங்களும் வெளியாகி கொண்டு ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுவிடும் . இந்நிலையில் விஜயன் கட்சி பெயர் என்று அறிவிக்கப்பட உள்ளதோ அன்று விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரபல யூட்யூப் சேனல் ஆன வலைப்பேச்சு தகவலை தெரிவித்துள்ளது.