அடுத்தடுத்து சிறை தண்டனை.! இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள்.! 

Pakistan Ex PM Imran khan

கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் . இந்த வேளையில், அவர் பிரதமர் பதவி வகித்த நேரத்தில் பதியப்பட்ட 2 வழக்குகளில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து சிறை தண்டனை தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

சர்வதேச சதி :

நேற்று, அரசு ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில்  இம்ரான் கான் பதவியில் இருந்த போது, தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சர்வதேச அளவில் சதிவேலைகள் நடக்கிறது. என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் உங்கள் குற்றங்கள் நீக்கப்படும் என ஒரு சர்வதேச நாடு கூறியுள்ளது என பொதுவெளியில் கூறினார்.

அரசு ரகசியங்கள் :

அந்த சமயம் தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்ரான் கான் குற்றசாட்டை அப்போதே அமெரிக்கா மறுத்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தான் , பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.  அரசு ரகசியங்களை பொது வெளியில் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், அரசு ரகசியங்களை பொதுவெளியில் கூறியது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறப்பட்டது.

தோஷகானா வழக்கு :

இதனை அடுத்து இன்றும் அரசு கருவூலம் தொடர்பான தோஷகானா வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், இம்ரான் கான் பிரதமர் பொறுப்பில் இருந்த காலத்தில் பிரதமருக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருட்களை மறைத்து  அதனை விற்றதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் குற்றவாளி என்றும், அவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் நீதிபதி முகமது பஷீர் தீர்ப்பளித்துள்ளார். மேலும்,  78.7 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்