கூட்டணி பேச்சு இன்னும் தொடங்கவில்லை… நாளை பொதுக்குழு கூட்டம் – பாமக

PMK

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேசிய மற்று மாநில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மறுபக்கம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக, தமிழகத்தில் வலுவான புதிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

அதன்படி, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் அதிமுக தொடங்கியுள்ளது. இந்த சூழலில், மக்களவை தேர்தலை முன்னிட்டு, நாளை பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர்!

சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் நாளை காலை 11 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்பார்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை என பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாமகவின் ஜிகே மணி கூறியதாவது, பாமக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை கூடுகிறது. பொதுக்குழுவில் ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில் விளக்கமளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்