கீழடியில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கீழடியில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி எப்போது மேற்கொள்ளப்பட உள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இதன் 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது. இந்த நிலையில் கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து கீழடியில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி எப்போது மேற்கொள்ளப்பட உள்ளது என உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு
மேலும், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் மத்திய தொல்லியல் துறையிடம் கொடுத்த அறிக்கை எப்போது மக்கள் பார்வைக்கு வரும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.