“ப்ளூ ஸ்டார்” பிளாக் பஸ்டர் வெற்றி! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, சாந்தனு பாக்யராஜ், லிசி ஆண்டனி, இளங்கோ குமரவேல், அருண் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த திரைப்படத்தினை பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் பார்த்த பலரும் நல்ல விமர்சனங்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்த பிரபலங்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
வெற்றி கொண்டாட்டம்
“ப்ளூ ஸ்டார்” திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தில் நடித்த பிரபலங்கள் எல்லாரும் இணைந்து கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார்கள். அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, சாந்தனு பாக்யராஜ், லிசி ஆண்டனி, இளங்கோ குமரவேல், என அனைவரும் இணைந்து கேக் வெட்டினார்கள். அப்போது படத்தில் பாடல்களை எழுதி பாடியுள்ள அறிவு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடி அசத்தினார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#BlueStar movie success celebration video pic.twitter.com/NjV2DD4SjI
— Dinasuvadu (@Dinasuvadu) January 30, 2024
வெற்றிக்குறித்து அசோக் செல்வன்
ப்ளூ ஸ்டார் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் எனது 19வது படம். ஆனால், இதுவரை இப்படி ஒரு வரவேற்பை பார்த்ததில்லை. எனக்கு அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு நான் இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” எனவும் அசோக் செல்வன் கூறியுள்ளார்.