TNPSC: குரூப்-4 காலிப் பணியிடங்கள் – ஓபிஎஸ் அறிக்கை.!

TNPSC Group 4 (

இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு ‘டிஎன்பிஎஸ்சி’ அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது என 6,244 இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,  அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து கொண்டு இருக்கிறது.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் ஆண்டிற்கு 70,000 என்ற வீதத்தில் நிரப்பப்பட வேண்டுமென்று நான் ஏற்கெனவே எனது அறிக்கைகள் வெளியிட்டுருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் 55,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

ஆனால், இன்று குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கையில் வெறும் 6,244 இடங்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்படையும் வகையில் இந்த அறிவிப்பை அறிவித்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூகநீதியினைக் கருத்தில் கொண்டு, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்