சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி.. 8 வாக்குகள் செல்லாது என அறிவிப்பு.!
சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற அறிவுறுத்தல் படி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டது. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.
சண்டிகரில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் தலைமை அதிகாரி 30 நிமிடங்கள் தாமதமாக வந்தார். இதையடுத்து தேர்தல் பணி தொடங்கியது. இதன் போது சண்டிகர் எம்பி கிரோன் கெர் முதலில் வாக்களித்தார். இதையடுத்து மற்ற கவுன்சிலர்கள் வாக்களித்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெற்று 12.30 மணியளவில் 36 வாக்குகளும் பதிவாகின.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் தலைமை அதிகாரி மீது விதிமீறல் குற்றச்சாட்டி உள்ளனர். சண்டிகர் மாநகராட்சியின் புதிய மேயராக பாஜக கவுன்சிலர் மனோஜ் சோன்கர் பதவியேற்றுள்ளார். மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வாட்ஸாப்பில் பரவும் போலி செய்தி.! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!
இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கபட்டதால் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பாஜக வேட்பாளர் மனோஜ் 16 வாக்குகளும், ஆம் ஆத்மி 12 வாக்குகளும் பெற்றனர். 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நிதிஷ் குமாருக்கு அதிர்ச்சி கொடுத்த பிறகு இப்போது சண்டிகரில் நடந்த மேயர் தேர்தல் மூலம் மீண்டும் இந்தியக் கூட்டணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முன்னதாக ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் தலைமை அதிகாரிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தை அணுகியதால் தேர்தலை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.