பாஜக பிரமுகர் கொலை வழக்கு – கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

Ranjith Srinivasan

கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில தலைவரும், வழக்கறிஞருமான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி காலை ஆலப்புழா நகராட்சி வெள்ளக்கிணற்றில் உள்ள தனது வீட்டில் மிககொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். அதுவும், அவரது தாய், மனைவி மற்றும் மகள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார்.

எஸ்டிபிஐ மாநில செயலாளர் கே.எஸ்.ஜான் கொலைக்கு பழிக்கு பழியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. எனவே, ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ-க்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஹேமந்த் சோரன் எங்கே? ஜார்கண்ட்டின் அடுத்த முதல்வர் இவர்தான்?… பாஜகவின் நிஷிகாந்த் துபே பேட்டி!

இந்த நிலையில், ரஞ்சித் ஸ்ரீனிவாசன் குடும்பத்தார் முன்னிலையில் கொல்லப்பட்ட வழக்கில் ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் நீதிபதி ஸ்ரீதேவி வி.ஜி தீர்ப்பு வழங்கினார். அதில், நைசாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லம், அப்துல் கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி பூவத்துங்கல், ஷெர்னாஸ் அஷ்ரப் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆலப்புழாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குற்றவாளிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கொலை வழக்கை, ஆலப்புழா எஸ்பி தலைமையிலான சிறப்புக் குழு விசாரித்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பிரதாப் ஜி.படிக்கல் மற்றும் வழக்கறிஞர்கள் ஸ்ரீதேவி பிரதாப், ஷில்பா சிவன், ஹரீஷ் காட்டூர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்