அடேங்கப்பா..! அரச மரத்தை சுற்றினால் இவ்வளவு நன்மையா..?

peepal tree

அரச மர வழிபாடு என்பது மிக உயர்ந்த வழிபாடாகும். இந்த அரச மரத்தை ஏன் சுற்றிவர வேண்டும் அதனால் என்ன நன்மைகள் மற்றும் எந்தக் கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்..

அரச மரத்தை அதிகாலையில் வலம் வருவதே சிறந்தது.அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவரும் நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும் நுனிப்பகுதியில் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள் அதனால்தான் அரசமரம் மும்மூர்த்திகளின் வடிவம் என கூறப்படுகிறது.

அரச மரத்தை வளம் வருவதால் ஏற்படும் நன்மைகள்

குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தை வளம் வந்து வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அரசமரம் அதிக அளவு ஆக்ஜிசனை  கொடுக்கிறது.தம்பதிகள் இருவரும் வலம் வர வேண்டும் .

கர்ப்பப்பை கோளாறு மற்றும் ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் அரச மரத்தின் கற்றை சுவாசிக்கும் போது கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது   இதனால் நச்சுக்கள் விரைவில் வெளியேறி குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

மற்ற நாட்களில் வழிபாடு செய்வதை விட சனிக்கிழமை குறிப்பாக அம்மாவாசை வரும் சனிக்கிழமை 108 முறை வலம்  வந்து வழிபாடு செய்தால் பாவங்கள் தீர்ந்து மோட்ச பலன் கிடைக்கும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.அதிகாலை 4. 30 லிருந்து 6 மணிக்குள் அரச மரத்தை வலம் வருவது சிறந்ததாகும்.

தீமைகள்

பொதுவாக அரச மரத்தை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.அரசமரம் என்பது ஒரு டவர் போல டவர் இருக்கும் இடத்தில் எவ்வளவு நோய் நொடிகள் வருமோ அதே அளவுக்கு அரசமரம் வீட்டில் இருந்தால் நோய் நொடிகள் வீண் செலவு போன்றவற்றைக் கொடுக்கும்.மற்ற மரங்களைப் போல அல்லாமல் சூரிய ஒளி வந்தவுடன் அரசமரம் கார்பன் டை ஆக்சைடை வெளிவிட தொடங்கிவிடும், இந்த நேரத்தில் நாம் அரச மர காற்றை சுவாசிக்கக் கூடாது. இதனால்தான் பகலில் அரச மரத்தை வலம்  வரக்கூடாது என கூறுகிறார்கள்.   ஆகவே அரச மரத்தை நாம் அதிகாலை நேரம் வலம் வந்து  வழிபாடு செய்து அதன் நற்பலனை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்