அடடே! ஒரு நாளைக்கு இத்தனை முறைதான் முகம் கழுவணுமா ?

face wash method

ஆண்களை விட பெண்கள் தான் அழகில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் ,அழகு பராமரிப்பில் முக்கிய பங்காக திகழ்வது தண்ணீர் தான் .   தண்ணீரை குடிப்பதோடு மட்டுமல்லாமல் அதில்  முகத்தை கழிவினால் ஏற்படும் பலன்கள் மற்றும் எந்த சருமம் உள்ளவர்கள் எத்தனை முறை கழுவலாம் என்பது பற்றியும் இப்பதிவில்  தெரிந்து கொள்வோம்..

தண்ணீர் நாம் அதிகமாக குடித்தால் நம் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும். அதற்காக தண்ணீரை பார்க்கும்போதெல்லாம் கழுவ வேண்டும் என்று  இருக்கக் கூடாது.

வறண்ட சருமம்

ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரு முறை கழுவினால் போதுமானது. இந்த சருமம் உள்ளவர்கள் நான்கு முறை கழுவினால் தோலில்  வறட்சி ஏற்பட்டு விரைவில் தோல் சுருக்கம் உண்டாகும்.குளிர்ந்த நீரை தவிர்க்கவும் .

அப்போ இந்த மாதிரி செஞ்சு கொடுங்க ..!

எண்ணெய் பசை சருமம்

இவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை கழுவலாம் .பருக்கள் உள்ளவர்களாக இருந்தால் நான்கு முறை கழுவ வேண்டும் சோப் பயன்படுத்தாமல் மிதமான அல்லது குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

கழுவும் முறை

காலையில் எழுந்தவுடன் ஃபேஸ் வாஷ் அல்லது சோப் பயன்படுத்தி முகம் கழுவி வரலாம். குளிப்பது இன்னும் சிறப்பானதாகும் இதனால் சருமம் நல்ல புத்துணர்ச்சியாக இருக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மதிய வேலைகளில் குறிப்பாக கோடை காலங்களில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும் அல்லது பழ  சாறுகளை பயன்படுத்தி மசாஜ்  செய்து கழுவிக் கொள்ளலாம்.

முகத்தை கழுவும் போது சுழற்சி முறையில் தான் கழுவ வேண்டும் மேலும் மேல் நோக்கி மசாஜ்  செய்து கழுவிக் கொள்ளலாம். முகத்தை கீழ்நோக்கி மசாஜ் செய்வதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் முகச்சுருக்கம் ஏற்படும்.

ஒவ்வொரு முறை முகம் கழுவும் போதும் சோப் வைத்து முகம் கழுவ கூடாது. ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தான்  சோப் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் .அதிகம் சூடான நீரில் கழுவினால் சரும திசுக்கள் சேதம் அடையும். மிகக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் அது முகத்தில் உள்ள எண்ணெய் பசைகளை முற்றிலும் நீக்கி சருமத்தை வறட்சி அடைய செய்யும்.

ஆகவே சூழ்நிலைக்கு தகுந்தவாறும்  உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறும்  இவற்றை சீரமைத்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த பதிவை படிப்பதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்தியும் பயனடையுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest