பிப்.27ம் தேதி 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

election commission

நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அறிவித்துள்ளது.

ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள்: உத்தரப்பிரதேசத்தில் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6,  மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் தலா 3, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் தலா 1 என மொத்தம் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் 2024க்கு அல்ல, 2029க்கு தயாராகி வருகிறது-ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்..!

எனவே, இந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின்படி, வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கும். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும்.

மேலும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதியாகும். பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவின் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்