எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் இளையராஜாவுக்கு தான் மகளா பொறக்கணும் – பவதாரிணி
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு சிறிய வயது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் இளையராஜா வெளியீட்டு உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பவதாரிணி உயிரோடு இருந்த சமயத்தில் தனது தந்தை குறித்து பேசிய வீடியோக்களும் தனது குடும்பம் பற்றியே பேசிய பழைய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இளையராஜா மகள் என்றால் எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்வியை அவரிடம் தொகுப்பாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
‘GOAT’ படம் வேண்டாம்! தெறித்தோடிய நெட்பிளிக்ஸ்?
அதற்கு பதில் அளித்த பவதாரிணி ” நான் என்னுடைய அப்பாவுக்கு மகளாக பிறந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அடுத்த ஜென்மம் மட்டுமில்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கு மகளாக பிறக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். கண்டிப்பாக நான் வேண்டும் விஷயங்களிலில் இதுவும் ஒன்று. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அப்பாக்கு தான் மகளாக பொறக்னும்” என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய பவதாரிணி ” என்னால் மறக்கவே முடியாத ஒரு நிகழ்வு என்றால் என்னுடைய அப்பாவிற்கு வெளிநாட்டில் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். அந்த பட்டத்தை வாங்க செல்லும்போது குடும்பமாக ஒன்றிணைந்து சென்றோம். அந்த சமயம் மிகவும் சந்தோசமாக இருந்தோம்” எனவும் பவதாரிணி பேசியுள்ளார்.