சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழ்நிலைகளை விவரித்து அவர்களை தொழில் தொடங்க தொழில் விரிவுபடுத்த தமிழகம் வரவேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளார்.
ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!
இது தொடர்பாக , இன்று ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், தற்போது டென்னிஸ்விளையாட்டு ஜாம்பவான் வீரர் ஜோகோவிச்சை (Djokovic) முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் பகிர்ந்துள்ளார். அதில், ” ஸ்பெயின் நாட்டின் பயணத்தின் பொது, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்தது எதிர்பாரா மகிழ்ச்சியை அளித்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.
டென்னிஸ் வீரர் ஜோகோவிச், டென்னிஸ் உலகில் மிக உயரிய கோப்பைகளில் ஒன்றாக கருதப்படும் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை 24 முறை வென்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Surprise in the skies: Met #Tennis legend @DjokerNole en route to #Spain! ???? pic.twitter.com/VoVr3hmk5b
— M.K.Stalin (@mkstalin) January 29, 2024