இந்த பலம் போதுமா? ரோட்னி ஹாக்கு கெத்தாக பதில் சொன்ன கிரேக் பிராத்வைட்!

rodney hogg Brathwaite

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடந்தது. அதில் நான்காம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த வரலாற்று நிகழ்வை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் வீரர் பிரையன் லாரா ஆனந்த கண்ணீர் விட்டார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி..!

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வைட் ” இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று எங்களுக்கு உத்வேகம் அளித்த இரண்டு வார்த்தைகள் இருந்தது.  அது என்னவென்று நாங்கள் இப்போது சொல்ல வேண்டும், நாங்கள் பரிதாபமாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தோம் என்று முன்னதாக ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறினார்.

அதுவே எங்கள் உத்வேகமாக இருந்தது. நாங்கள் பரிதாபகரமானவர்கள் அல்ல என்பதை காட்ட விரும்பினோம்.  இப்பொது அவரிடம் நான் சொல்ல விரும்புகிறேன் இந்த தசைகள் அவருக்குப் போதுமானதா என்று நான் அவரிடம் கேட்க வேண்டும் என தனது கைகளின் பலத்தை செய்கையாக காட்டி கூறினார். இந்த போட்டியின் மூலம் நான் என்னுடைய பழைய வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்ப்பதாக உணர்கிறேன். போட்டியில் வெற்றிபெற்றது ரொம்பவே மகிழ்ச்சி” எனவும் கிரேக் பிராத்வைட் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்