நில மோசடி வழக்கு… அமலாக்கத்துறை அலுவலகம் வந்த லாலு பிரசாத் யாதவ்..!

Lalu Prasad Yadav

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான  லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக  இருந்தபோது ரெயில்வே பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். 2004-09 காலகட்டத்தில் ரெயில்வே பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ  மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இந்நிலையில்,  நில மோசடி வழக்கில் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தவுள்ளது. இதைத்தொடர்ந்து,  லாலு பிரசாத் யாதவ்  அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்துள்ளார். பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே ராஷ்டிரீய ஜனதா தள தொண்டர்கள் கூட்டம் கூடியது.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் முன்னாள் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

சற்று நேரத்தில் நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்..!

இந்த வழக்கில் டிசம்பர் 22 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் தேஜஸ்வி யாதவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஆனால் அவர் ஆஜராகவில்லை. நாளை ஜனவரி 30-ஆம் தேதி தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.  இன்று , லாலு பிரசாத் யாதவ் தவிர, அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பார்தி ஆகியோரும் விசாரணைக்காக பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ராஷ்டிரீய ஜனதா தள உடனான கூட்டணியை முறித்து கொண்டு மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக பதவியேற்றார். 9-வது முறையாக பீகார் முதல்வராகநிதிஷ் குமார் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்