மக்களவை தேர்தல்! திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு

திமுக – காங்கிரஸ் கட்சி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக திமுக எம்.பி டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல காங்கிரசில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும், தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, ”முதல்கட்ட ஆலோசனையில் இருதரப்பும் ஈடுபட்டது. கூட்டணியின் மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குறித்த தேதியை அறிவிப்போம்” என்றார். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளே மீண்டும் வழங்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “இவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், அப்புறம் ஒன்றுமே இல்லையே. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை உள்ளது, அதன் பிறகுதான் தெரியும்” என்றார்.

தொகுதி பங்கீடு: திமுக, காங்கிரஸ் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும் போது, “டெல்லியிலிருந்து வந்த தலைவர்கள், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளித்தது. ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது தொடர்பாகவும் பேசப்பட்டது. 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி என்ற செய்தி பொய்யானது” என்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்